Header Ads

கல்லறையில் கருவறை பாடல் எதை சொல்ல போகின்றது...?

கல்லறையில் கருவறை, kallarayil karuvarai,கல்லறையில் கருவறை, kallarayil karuvarai songs
அண்மைக்காலமாக உலகெங்கும் வாழும் தமிழ் கலைஞர்கள் இந்திய சினிமாவிற்க்கு சவால் விடும் வகையில் குறும் திரைப்படங்கள் மற்றும் பாடல்களினை பெரும் பொருட் செலவுகளுடன் வெளியிட்டு வருகின்றார்கள் இந்த வகையில் பிரான்ஸ் வாழ் தமிழ் கலைஞர்களின் படைப்பாக " கல்லறையில் கருவறை " எனும் தலைப்பில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக தயாரித்து வருகின்றார்கள் இப் பாடல்ளுக்கான first look poster இனை தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று AS film style நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டிருந்தது.

இப் first look poster வெளியாகியதில் இருந்து சமூக வலைத்தளங்களான முகநூல் டுவிட்டர் கூகில் பிள‌ஸ் போன்ற வற்றில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. அதைமட்டும் இன்றி பிரபல தமிழ் இணையதள‌ங்களும் தமது நாளாந்த செய்திகளில் இதற்கு முக்கிய இடம் கொடுத்து பதிவேற்றம் செய்துள்ளன.


சரி விடயத்திற்க்கு வருவோம்.....

காதலர் தினத்தை மைய படுத்தி இப்பாடல் வருவதால் இக் கல்லறையில் கருவறை படைப்பு சொல்ல வரும் செய்தி என்னவாக இருக்கும் ? ஏன் இதற்க்கு இவ்வளவு எதிர் பார்ப்பு?


பொதுவாக காதல் என்பது ஒரு புனிதத்துவம் வாய்ந்த ஒன்று .. உலகில் சில மொழிகளுக்கு ஒரு தனித்துவம் இருக்கும் தமிழ் மொழியை எடுத்துக் கொண்டோமேயானால் மொழிகளில் பழமை வாய்ந்தது நாகரீகங்கள் தோன்றுவதற்கு முன்னமே இம் மொழி தோன்றியது என பல சிறப்புக்கள் உண்டு இது போன்றே ஆங்கில மொழிக்கு சர்வதேச மொழி என சிறப்பு உள்ளது. இது போன்றுதான் உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் தம் இனம் கலாச்சாரம் போன்றவற்றை மையப்படுத்தி சிறப்பு பெறுகின்றன.

ஆனால் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் பேசும் ஒரே மொழி காதல் மொழி இதற்க்கு எண்ணிக்கை கிடையாது இலக்கணம் இலக்கியம் என்று எதுவும் கிடையாது ஆனால் எந்த மொழி பேசுபவராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரே மொழி காதல் மொழியாகும்.


இக்  காதல் தன்னுடன் சில குணாதிச‌ங்களினை கொண்டுள்ள‌து அவைதான் மகிழ்ச்சி ,நம்பிக்கை ,பிரிவு ,துரோகம், காமம்,வலி, தோல்வி என நபருக்கு நபர் இடத்துக்கு இடம் தன்னை உரு மாற்றிக் கொள்ளும்.

இந்த வகையில்  " கல்லறையில் கருவறை " பாடல்ளுக்கான first look poster  சொல்லவந்திருக்கும் செய்தி என்ன‌ வாக இருக்கும் ?

kallarayil karuvarai,kallarayil karuvarai songs
இதில் வெளிப்படையாக தெரிகின்ற விடயம்  இரு கதாநாயகர்கள் ஒரு கதாநயகி கதா நாயகன் சுபாஸ் உடன் கை கோர்த்த படி கதாநயகியும் நாயக‌ன் ஜெய்வியுடன் எதிராக கதநாயகியும் உள்ளவாறு தமது முதல் புகைபடத்தினை வெளியிட்டுள்ளார்கள்;


இதில் இருந்து இயக்குன‌ர் என்ன செய்தியினை சொல்ல வருகின்றார்...?

இந்திய சினிமாவில் பல்லாயிரக்கணக்கான காதல் படைப்புக்கள் உள்ளன 

காதல் தேசத்தில் வரும் ஒரு பாடல் நினைவுக்கு வருகின்றது ஓ வெண்னிலா இரு வானிலா எனும் பாடல் இது இரு நண்பர்கள் ஒருவரை காதலிக்கும் கதை

அடுத்து மின்சார கனவு இது காதலுக்கு உதவ வந்தவரே காதலியை கரம் பிடிக்கும் கதை

அஞ்சலி இரு சகோதரர்கள் ஒரு வரை காதலிக்கும் கதை

விண்ணைத்தாண்டி வருவாயா தன் பெற்றோர்களை எதிர்க்க தைரியம் இல்லா பெண் தன் காதலனை கைவிட்டு விட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்யும் கதை

இவ்வாறு இந்திய சினிமாவின் திரை கதைகளையே அடுக்கிக் கொண்டு செல்ல முடியும்..

ஆனால்  " கல்லறையில் கருவறை " இவற்றையும் தாண்டி ஒரு காதல் காவியத்தை படைக்குமா? இயக்குனரின் கற்பனை எவ்வாறானதாக இருக்கும் என பல கேள்விகளை எழுப்புகின்றது இப்படத்தின் first look poster 

காதல் ஒரு அட்சய பாத்திரம் போன்றது இது அள்ள அள்ள வற்றாதது இதனால் தான் இன்னமும் காதலும் காதல் கதைகளும் சலிக்கமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன‌ அதனாள் இப்பாடல் இன்னமும் எதிர்பார்பை ஏற் படுத்தி உள்ளமை குறிப்பிட தக்கது.


பொறுத்திருந்து பார்போம் காவியம் படைக்குமா  கல்லறையில் கருவறை......?

No comments:

Powered by Blogger.