Header Ads

இந்திய திரைப்பாடலுக்கு நிகராக பிரான்சில் உருவாகும் “கல்லறையில் கருவறை” பாடல்..!

Kallaraiyil Karuvarai ,jeivi,kaathal naayakan jeivi
Kallaraiyil Karuvarai 
இந்திய சினிமாவின் திரைப்பாடல்களுக்கு நிகராக பிரான்ஸ் பரிஸில் வாழும் தமிழ் கலைஞர்களால் “கல்லறையில் கருவறை” எனும் பாடல் காட்சி உருவாக்கப் பட்டு வருகின்றது.

பிரான்ஸ்  AS film style சுபாஸ் தயாரித்து இயக்கும் இப் பாடலுக்கு வரிகளை லதீப் பாலசுப்ரமணியம் எழுத இப்பாடலுக்கு தென்னிந்திய இசை அமைப்பாளரான அக்னி கணேஷ் அவர்கள் இசையமைக்க தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் ராகுல் அவர்கள் பாடி இருக்கின்றார்.

முற்று முழுதான ஒரு காதல் காவியமாக உருவாக்கப்பட்டு வரும் இப்பாடல்  காதலர் தினமான பெப்ரவரி 14 அன்று வெளியிடப்பட இருக்கின்றது


இப்பாடல் காட்சியில் சுபாஸ் மற்றும் “அறிமுக‌ நாயகன்” ஜெய்வி நடிக்க கதாநாயகியாக 2014 ஆண்டு Miss India France Best Smile எனும் பட்டத்தை வென்ற காயத்ரி நடிக்கின்றார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடலின் காட்சிகள் பிரான்சின் முக்கிய மற்றும் மைய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதுடன் “கல்லறையில் கருவறை”பாடலின் first look poster  இனை தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று AS film style நிறுவனம் அதிகார  பூர்வமாக வெளியிட்டுள்ளது. 


இப்பாடலின் first look poster  வெளியாகி சில மணி நேரங்களுக்குள் சமுக வலைத்தளங்களில் அமோக‌ வரவேற்பை பெற்றுள்ளதுடன் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kallaraiyil Karuvarai first look poster

No comments:

Powered by Blogger.