Header Ads

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரி

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரி
ன் ஜாமின் மனுக்களை உடனடியாக விசாரிக்க, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறைகால நீதிபதி மறுத்து விட்டார். ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, அக்., 7ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் வரை, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமின் மனுக்களை, அவசர மனுவாக விசாரிக்க கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள், கர்நாடகா உயர்நீதிமன்ற பதிவாளர் தேசாயை சந்தித்து, நேற்று முன்தினம் முறையிட்டனர். இதனால், அக்., 1ம் தேதி (நேற்று) காலை, 10:30 மணிக்கு விசாரணை நடக்கும் என, பதிவாளர் தேசாய் அறிவித்தார்.உயர் நீதிமன்றம் நேற்று கூடியதும், ஜெயலலிதா தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, குமார், மணிசங்கர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.காலை, 10:30 மணிக்கு நீதிபதி ரத்னகலா வந்தார். அதுவரை, அரசு வழக்கறிஞர் பவானிசிங் வரவில்லை. விசாரணை துவங்கியதும், பரபரப்பு ஏற்பட்டது.

நீதிபதி ரத்னகலா: அரசு தரப்பு வழக்கறிஞர் வரவில்லையா? அப்படியானால், கர்நாடகா அரசுக்கு, அரசு வழக்கறிஞர், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை, தள்ளிவைக்கிறேன்.
ஜெ., வழக்கறிஞர்: அரசு வழக்கறிஞர், வந்து கொண்டு இருக்கிறார். சிறிது நேரம் காத்திருக்க வேண்டுகிறோம்.
(அப்போது, அரசு வழக்கறிஞர் பவானி சிங், நீதிமன்றத்துக்குள் வந்தார்; தாமதத்துக்கு மன்னிப்பு கோரினார்)
நீதிபதி: ஜாமின் மனுவுக்கு உங்கள் (பவானி சிங்) தரப்பில், ஆட்சேபனை தெரிவிக்கிறீர்களா?
வழக்கறிஞர் பவானி சிங்: எழுத்து மூலமாக தாக்கல் செய்கிறேன்.

(பதில் மனுவை தாக்கல் செய்தார்; நீதிபதி, பெற்றுக் கொண்டார்)
நீதிபதி: இந்த மனுக்களை, விடுறை கால நீதிபதியான நான், விசாரிப்பதை விட, வழக்கமான அமர்வு விசாரித்து, உத்தரவு பிறப்பிப்பது தான் நல்லது. எனவே, வழக்கு விசாரணையை தள்ளி வைக்கிறேன்.
ராம்ஜெத்மலானி: இந்த மனுக்களை விடுமுறை கால நீதிபதி விசாரிக்க அதிகாரம் உள்ளது. எனவே, இதை விசாரித்து, ஜாமின் வழங்க வேண்டும்.
நீதிபதி: இந்த மனுக்களை விசாரிக்க, தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை. நீதி நலன் கருதி, மனுக்களை, அக்., 7ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.
இவ்வாறு, வாதம் நடந்தது.பின், நீதிபதி ரத்னகலா இருக்கையில் இருந்து எழுந்து, தன் அறைக்குள் சென்றார்.பரபரப்பாக எதிர்பார்த்த ஜாமின் மனு மீதான விசாரணை, எட்டு நிமிடத்தில் முடிந்ததால், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் நீதிமன்ற ஹாலில் கோஷமிட்டனர். 'திட்டமிட்டு, எங்களுக்கு அநீதி அளிக்கப்படுகிறது, எங்கள் தரப்பு வாதத்தை கேட்க கூட, தயாராக இல்லை. நீதி செத்து விட்டது; எங்களை நீதிமன்றம் அவமதிக்கிறது' என, கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற ஹாலுக்குள் வந்த போலீசார், அரசு 

Advertisement
வழக்கறிஞர் பவானி சிங்கை, பாதுகாப்புடன் வெளியே அழைத்து சென்றனர். அதன் பின், அ.தி.மு.க., ஆதரவு வழக்கறிஞர்களில் சிலர், நீதிமன்றம் முன் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது. அவர்களை, போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர், வழக்கறிஞர்கள் அனைவரும், ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, 'ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணையை, இன்றே (நேற்று) நடத்த வேண்டும். ஜெயலலிதாவுக்கு, உடல் நலம் சரியில்லை. தமிழகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது' என, உயர்நீதிமன்ற பதிவாளரிடம், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு, செப்., 29 முதல் அக்., 5ம் தேதி வரை தசரா விடுமுறை; அக்., 6ம் தேதி, பக்ரீத் விடுமுறை என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், உயர் நீதிமன்றம், வரும், 7ம் தேதி தான் கூடும். எனவே, அன்றைய தினம் தான், ஜெ., ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. அதுவரை, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஜெ., ஜாமின் மனு விசாரணைக்கு வந்ததையொட்டி,உயர் நீதிமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு வழக்கறிஞரின் அடையாள அட்டையை பரிசீலித்த பின்னே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.