Header Ads

ஓசூரில் கொலையான மேடைபாடகியின் ஆடம்பர வாழ்க்கை ரகசியம் ;வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை

ஓசூர் மூக்கண்டப் பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா என்கிற ஜெயந்தி (வயது 32). மேடை பாடகியான இவர், நடனமும் ஆடி வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி காலை வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப் பட்ட அவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அது குறித்து சிப்காட் போலீ சார் விசாரணை நடத்தி வந்தனர்.

கொலையான ஆஷான் வீட்டில் மதுபாட்டில்கள், கத்திகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. வீட்டில் நகைகள், பணம் எதுவும் திருட்டு போக வில்லை. இதனால் நகை, பணத்திற்காக இக்கொலை நடக்கவில்லை என்பதும், உல்லாசமாக இருக்க வந்த இடத்தில் கொலை நடந்ததும் உறுதி செய்யப்பட்டுள் ளது.

கொலை செய்யப்பட்ட ஆஷா 2 சிம்கார்டுகள் கொண்ட செல்போனை பயன்படுத்தி வந்தார். அவரது செல்போன் மாயமாகி உள்ளது. மேலும் அந்த செல்போன் ஆப் செய்து வைக்கப் பட்டு உள்ளது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். மாதேஷ் (24). கிருஷ் ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள பெலத்தூரைச் சேர்ந்த வெங்கடசாமி என் பவரின் மகன். சீனிவாசன்  (42). கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர். செல்போன் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்த னர். இவர்கள் இருவரும் நேற்று இரவு ஓசூர் இரண் டாவது   ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவ லில் வைக்க மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார் உத்தரவிட் டார். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

 சம்பவத்தன்று 4 பேரும் மேடைப்பாடகி  ஆஷாவிடம் உல்லாசம்  அனுபவிக்க சென்றனர்.  மது  மற்றும் புரோட்டா பார்சல் வாங்கி  சென்று 3 பேர் உல்லாசம் அனுபவித்தனர். 4-வது நபரான சீனிவாசன் உல்லாசம்  அனுபவிக்க முயன்ற போது களைப்பாக இருக்கிறது சிறிது நேரம் போகட்டும் என்று ஆஷா கூறி இருக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து அவரை  கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றதாக கைதான 2 பேர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி உள்ளனர். 

போலீசார் விசாரணையில் ஆஷா வின் ஆடம்பர வாழ்க்கை குறித்து   பல தகவலகள் கிடைத்து உள்ளன.

கொலை செய்யப்பட்ட ஆஷாவின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி  மாவட்டம் எலத்தகிரி ஆகும். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் வந்து மேடைப் பாடகி மற்றும் டான்சராக வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். விசிட்டிங் கார்டு அடித்து பலரை தனது வலையில் வீழ்த்தி அவர்களிடம் தன்னை ஒப்படைத்து    பணம் வசூலித்து இருக்கிறார். ஒரு நபருக்கு ரூ ஆயிரம் வீதம் வசூலித்து   இருக்கிறார். மாதந்தோறும் ரூ50 ஆயிரம் வரை சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு உள்ளார்.   இதற்காக ஓசூர் மூக்காண்டப்பள்ளி எம்.எம்.நகர் மற்றும் ஓசூர் கிருஷ்ணகிரி  ரோட்டில் உள்ள கசவுகட்டா பகுதியில் ஆடம்பரமாக இரண்டு வீடுகளை  வாடகைக்கு எடுத்து குடியிருந்து உள்ளார். 

கசவு கட்டா வீட்டில் இருந்து மட்டும் போலீசார் 200&க்கும் மேற்பட்ட ஆஷாவின் உடைகளை கைப்பற்றி உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை ஜீன்ஸ்பேண்டு மற்றும் டாப்ஸ் ஆகும். ஆஷா விதவிதமான உடைகள் உடுத்தி சினிமா நடிககை போல மேக்கப் செய்து தன்னை போட்டோ எடுத்து  வாட்ஸ் அப்பில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளார். அந்த படங்களை  பார்த்து விட்டு வாடிக்கையாளர்கள் அவரிடம் வரத் தொடங்கி உள்ளனர். 

ஆடம்பரமாக  உள்ள அதுவும் காரில் வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே அவர் கவனித்து உள்ளார்.  மேலும் வாடிக்கையாளரே மது பாட்டில்கள் மற்றம் பிரியாணி &புரோட்டா பார்சல் வாங்கி  வருமாறு கூறி விடுவாராம். மேலும் ஆணுறைகளையும் அதிக அளவில் வீட்டில் வாங்கி  வைத்து உள்ளார்.

 மேலும் விலை உயர்ந்த செல்போனையும் வைத்திருந்தார். பான் கார்டு  மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வாங்கி உள்ள இவருக்கு  ரகுபதி, ஜெயராமன், தர்மா  என்ற  3 கணவர்கள் இருந்தனர்.  ஆனால் அவர்கள்  இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இவருக்கு பிரியதர்ஷினி என்ற 10 வயது மகள் இருக்கிறாள். அவள் எலத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 5&ம் வகுப்பு படித்து வருகிறாள்.  தனது மகளுக்கு தனது  தொழில் தெரிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து உள்ளார். என்றாலும் ஆஷாவின் ஆடம்பர வாழ்க்கையே அவரது உயிரை பலி வாங்கி விட்டது. 

No comments:

Powered by Blogger.