Header Ads

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சுதாகரனுடன் அவரது மனைவி சந்திப்பு

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சுதாகரனை அவரது மனைவி சந்தித்து பேசினார்.

சுதாகரனை பார்க்க...

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்கு சென்ற முதல் நாள் அவரது உடல் நிலையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 13 நாட்களுக்கு பின்னர் சுதாகரனை பார்ப்பதற்காக அவரது மனைவி சத்தியலட்சுமி, இவரது தாயார் சாந்தி மற்றும் தந்தை ஆகிய 3 பேர் நேற்று ஒரு காரில் பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தனர். யார் என்ற விவரத்தை கேட்ட பிறகு அவர்களை ஒசரோடு சந்திப்பில் இருந்து உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

சந்தித்து பேசினர்

அவர்கள் சிறைக்கு உள்ளே சென்று சுதாகரனை சந்தித்து பேசினர். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சுதாகரனின் உடல் ஆரோக்கியம் பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே ஜெயலலிதாவை பார்ப்பதற்காக நேற்றும் ஏராளமானவர்கள் வந்தனர். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் மந்திரிகள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, பச்சைமால் மற்றும் எம்.பி.க்கள் இளவரசன், அசோக்குமார் உள்பட பலர் பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தனர். ஆனால் அவர்களை ஜெயலலிதா பார்க்கவில்லை. சிறை முன்பு சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றனர்.

பாதுகாப்பு குறைப்பு

நேற்றும் சிறை முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஜெயலலிதாவை பார்ப்பதற்காக வரும் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசாரின் எண்ணிக்கையையும் குறைக்க போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். என்றாலும் கூடுதல் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.