Header Ads

ஜெயலலிதா மீது மக்களிடம் புதிய அனுதாபம் ஏற்பட்டுள்ளது: சோ கருத்து

தலைவாசல் >> செய்திகள் >> மாவட்டச்செய்திகள் >> சென்னை
ஜெயலலிதா மீது மக்களிடம் புதிய அனுதாபம் ஏற்பட்டுள்ளது: சோ கருத்து
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 28, 12:05 PM IST   கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது22 Share/Bookmark printபிரதி
 ஜெயலலிதா மீது மக்களிடம் புதிய அனுதாபம் ஏற்பட்டுள்ளது: சோ கருத்து


சென்னை, செப்.28–

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதித்துள்ளதாக பரவலான கருத்து வெளியாகி உள்ளது.

ஆனால் ஜெயலலிதா இந்த சோதனைகளில் இருந்து மீண்டு வருவார் என்று எழுத்தாளரும், நடிகருமான சோ கூறினார். அவர் மேலும் கூறியதாவது:–

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது உண்மையில் அவருக்கு பெரும் பின்னடைவுதான். இதற்காக அவரை அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கிவிட முடியாது.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் எதையோ நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து மீண்டுவர ஏராளமான சட்டவழிகள் உள்ளன. எனவே அவர் மீண்டு வருவார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் தன்மை தமிழ்நாட்டு மக்களிடம் அவர்மீது பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இத்தகைய அனுதாபம் யாருக்கும் கிடைத்ததே இல்லை.

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு நிச்சயமாக அவருக்கு பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த அரசியல் நிகழ்வுகளை கருத்தில் கொண்டால் இது புரியும்.

இவ்வாறு சோ கூறினார்.

No comments:

Powered by Blogger.