Header Ads

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை ? அடுத்த முதல்வர் யார் என பரபரப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யும் விதமாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இன்று சென்னையில் மாலை கூடி ஆலோசிக்கவுள்ளதாக அ.தி.மு.க., வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கிடையில் பெங்களூரு சிறையில் ஜெ., வை சந்திக்க பெங்களூரு சென்ற அமைசச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆகியோருக்கு சந்திக்க சட்ட ரீதியிலான அனுமதி கிடைக்காததால் மிகவும் சோகத்துடன் சென்னை திரும்பினர். 

4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் அவர் தனிச்செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். காலையில் இவருக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இவரை சந்திக்க அமைச்சர்கள், ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனிச்சாமி, கோகுல இந்திரா, சின்னையா, முருகூர் சுப்பிரமணியன், சம்பத், செந்தில்பாலாஜி, சண்முகநாதன்மற்றும் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இவர்களுக்கு ஜெ.,வை சந்திக்க அனுமதி கிட்டவில்லை. சந்தித்ததாக உறுதியான தகவலும் இல்லை. 


8 கார்களில் சென்னை நோக்கி : அரசு ஆலோசகரான முன்னாள் செயலர்களான ஷீலாபாலகிருஷ்ணனன், மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 2 பேர் சென்றனர். இவர்களும் ஜெ.,வை சந்திக்க முடிந்ததா என்று உறுதியான தகவலும் இல்லை. 


சோகமாக வெளியே வந்த அமைச்சர்கள் தங்களின் பி.ஏ.,க்கள் மூலம் விடுதிகளில் இருந்து பேக்குகள் எடுத்து வரச்சொல்லி 8 கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டனர். ஜெயில் வளாகத்தில் காத்திருந்த நிருபர்கள் அமைச்சர்களிடம் பேச முற்பட்டபோது, அனைவரும் மவுனமாகவே சென்று விட்டனர். 


சுதாகரனுக்கு குளூகோஸ் ? தமிழக முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இவர் முதல்வராக நீடிக்க முடியாது. இதனால் அடுத்து யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்பது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்படி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணன், சைதை துரைசாமி , விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணன், சைதை துரைசாமி ஆகிய 3 பேரும் டாப்லிஸ்ட்டில் உள்ளனராம். 

அ.தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னை வர உத்தரவிடப்பட்டுள்ளது. மாலையில் இக்கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவர். அமைச்சர்கள் பட்டியலும் தயாராகும். பின்னர் கவர்னரை சந்தித்து தெரிவிக்கப்படும். 


விஜயகாந்த் கவர்னர் சந்திப்பு : இதற்கிடையில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் கவர்னர் ரோசையாவை சந்தித்து மனு கொடுத்தார். இதில் மாநில சட்டம் ஒழுங்கை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரியுள்ளார். கவர்னர் மாளிகை வெளியே நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த் இந்த தீர்ப்பு முதலமைச்சருக்கு ஏற்பட்ட கதியே மற்றவர்களுக்கும் ஏற்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார் விஜயகாந்த். 


பெங்களூரு சிறை வளாகம் அருகே வந்த அ.தி.மு.,க, தொண்டர்களை போலீசார் விரட்டி அடித்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கேயே ஒப்பாரி போராட்டம் நடத்தினர். 

No comments:

Powered by Blogger.