Header Ads

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 7 டாக்டர்கள் கொண்ட குழுவினர் நடத்தினர்

நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை பெங்களூர் மருத்துவமனையில் சுமார் 51/2 மணி நேரம் நடைபெற்றது. 7 டாக்டர்கள் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தினர்.

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பெங்களூர் பிடதி போலீசில் அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் என்பவர் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இந்த வழக்கு விசாரணை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.

விசாரணையின்போது நித்யானந்தா கூறிய தகவல்களின் அடிப்படையில் சி.ஐ.டி. போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய ராமநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்தன. ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆண்மை பரிசோதனை நடத்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் காலை 9 மணிக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி. போலீசார் நித்யானந்தாவுக்கு நோட்டீசு அனுப்பினர். அதன்படி நித்யானந்தா சாமியார்  காலை 7.45 மணிக்கு விக்டோரியா மருத்துவமனைக்கு காரில் வந்தார். அவருடன் சீடர்களும் வந்தனர். காலை 8 மணிக்கு மருத்துவ பரிசோதனைகள் தொடங்கியது.
விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் துர்கண்ணா தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய மருத்துவ பரிசோதனை பகல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதுகுறித்து ஆண்மை பரிசோதனை செய்த மருத்துவ குழுவின் தலைவர் டாக்டர் துர்கன்னா கூறுகையில், நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை மருத்துவ பரிசோதனை செய்து முடித்துவிட்டோம். அவசியமான சோதனைகளை செய்தோம். சோதனைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கினார். மருத்துவ சோதனை அறிக்கை நாளை சி.ஐ.டி. போலீசாரிடம் வழங்கப்படும் என்றார். 

No comments:

Powered by Blogger.