Header Ads

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்...! வாரஇதழ் கணிப்பு

பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தது. அதோடு தபால் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும் ஓட்டெடுப்பு நடத்தியது.

இந்த ஓட்டெடுப்பில் நேரடியாக 18 லட்சத்து 13 ஆயிரத்து 298 பேரும், தபால் மூலமாக 8 லட்சத்து 79 ஆயிரத்து 261 பேரும், இணையதளம் மூலம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 91 பேரும் என, மொத்தம் 34 லட்சத்து 98 ஆயிரத்து 650 பேர் ஓட்டளித்துள்ளனர்.

இதில் இளைய தளபதி விஜய் 12 லட்சத்து 80 ஆயிரத்து 300 வாக்குகளுடன் முதலிடம் பெற்று அடுத்த சூப்பர் ஸ்டார் ஆனார். அவர் தல அஜீத்தை விட 62 ஆயிரத்து 650 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். இரண்டாம் இடம் பிடித்த அஜீத் 12 லட்சத்து, 17 ஆயிரத்து 650 ஓட்டுகள் பெற்றிருந்தார். மூன்றாவது இடம் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. அவர் 5 லட்சத்து 47 ஆயிரத்து 50 ஓட்டுகள் பெற்றிருந்தார்.

தனுஷ் 4ம் இடத்தையும், விக்ரம் 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர். சிம்புவுக்கு 6வது இடமும், ஆர்யாவுக்கு 7 து இடமும், ஜீவாவுக்கு 8வது இடமும் கிடைத்துள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டராக விஜய்யை அந்த வார இதழ் அறிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.