Header Ads

சூடுபிடிக்கும் ஆசிக் மீரா மீதான பாலியல், கொலை மிரட்டல் புகார்கள்

திருச்சி துணை மேயர் ஆசிக் மீரா பதவிப் பறிப்பு, அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட விவகாரம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி துணை மேயராக இருந்த ஆசிக் மீரா மீது துர்கேஸ்வரி என்ற இளம்பெண் தன்னை ஒரு குழந்தைக்கு தாயாக்கிவிட்டு ஏமாற்றியதுடன் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி வருவதாக திருச்சி மாநகர காவல்துறையில் புகார் செய்து மாதக்கணக்கில் அலைந்து கொண்டிருக்கிறார்.

5 நாள் கெடு முடிந்தது

இதுகுறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞரான பானுமதி கூறிய தாவது, ‘காவல்துறையினரிடம் சனிக்கிழமை புகார் கொடுத்த போது, பொன்மலை காவல் சரக உதவி ஆணையர் எங்களிடம் 2 நாள் அவகாசம் கேட்டார். ஆனால், புகார் கொடுத்து 5 நாள்கள் ஆகிவிட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

நாங்கள் இனி வேறு வடிவ போராட்டம் மூலம் காவல்துறைக்கு வழக்கு பதிவு செய்ய நெருக்கடி கொடுப்போம். மக்களை திரட்டி போராடுவோம் அல்லது நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து வழக்கு பதிவு செய்ய உத்தரவு வாங்குவோம் என்கிறார்.

அலட்சியம் செய்த போலீஸார்

காவல்துறையினரிடம் தனது கர்ப்பத்துக்கு காரணம் ஆசிக் மீரா தான் என்பதற்கான ஆதாரங்களை துர்கேஸ்வரி ஏற்கெனவே பல தடவை வழங்கியுள்ளார். ஆனால், அப்போதெல்லாம் அந்த ஆதாரங் களை அலட்சியம் செய்த போலீஸார், இப்போது துர்கேஸ் வரியை ஆதாரங்கள் இருந்தால் கொடு எனக் கேட்டு மிரட்டுகின்றன ராம். துர்கேஸ்வரி, ஆசிக் மீரா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தது, கைப்பட எனது மனைவி துர்கேஸ்வரி என எழுதிக் கொடுத்து கையெழுத்து, கைரேகையிட்டு கொடுத்த கடிதம், ஆசிக் பெயரில் வாங்கிய சிம் கார்டை துர்கேஸ்வரிக்கு வழங்கி அதை பயன்படுத்தி வந்தது உள்ளிட்ட பல ஆதாரங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளார் துர்கா.

மிகப்பெரிய ஆதாரம்

இந்த ஆதாரங்களின் நகலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கத் தயாராகவும் இருக்கிறார். அதையெல்லாம் விட மிகப்பெரிய ஆதாரமான பிறந்து 2 மாதமே ஆன குழந்தை கரிஷ்மா ஆசிகாவும் துர்கேஸ்வரி வசமே உள்ளது.

ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்என்று காவல்துறை தரப்பில் கேட்டதற்கு, ‘இது ஒரு சென்சிட்டிவான வழக்கு. எடுத்தோம் கவிழ்த்தோம் என இதில் செயல்பட முடியாது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம். இன்னமும் சில முக்கிய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்க அந்தப் பெண் முன்வரவில்லை. அவற்றை எல்லாம் கொடுத்தார் என்றால் சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்று வழக்கு பதிவு செய்வோம்’ என்கிறார்கள்.

திரையரங்கம், திருமண மண்டபம், குடியிருப்புகள், காலியிடங்கள், திரைப்பட விநியோகத் தொழில், கோடிக்கணக்கில் பணம் என சொத்துக்களை மரியம்பிச்சை சேர்த்து வைத்து விட்டு போயிருக்கிறார். ஆனால், இவை தன்னைத்தவிர வேறு வாரிசுகளுக்கு போய் சேரக் கூடாது என்பதில் குறியாக இருப்பதால் தவறுக்கு மேல் தவறு செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் ஆசிக் மீரா என்கிறார்கள் மரியம்பிச்சையை நன்கு அறிந்தவர்கள்.

No comments:

Powered by Blogger.