Header Ads

பிரபல தெலுங்கு நடிகருடன் சேர்த்து ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை பற்றி ஆபாச செய்தி 2 வாலிபர்கள் கைது

ஹைதராபாத்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அவரையும், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸையும் சேர்த்து இணையதளத்தில் ஆபாச செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.இது குறித்து ஷர்மிளா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில் , என்னை கேவலமாக விமர்சித்து இணையதளத்தில் செய்தி பரப்பப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னை அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள் இப்படி துஷ்பிரயோக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதை ஒரு இந்திய கலாச்சார பெண்ணுக்கு, ஒரு கணவரின் நல்ல மனைவிக்கு, ஒரு தாய்க்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதுகிறேன். இதனை உடனடியாக தடுக்காவிட்டால் இது வளர்ந்த கொண்டே போகும். நான் எனது அண்ணணுக்கு ஆதரவாக அரசியலுக்கு வந்தேன். எனது அரசியல் பிரவேசத்தை விரும்பாத சிலர் என்னிடம் நேரடியாக மோதாமல் இப்படி குறுக்கு வழியில் என்னை களங்கப்படுத்த தரம் தாழ்ந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள். நடிகர் பிரபாசை சந்தித்ததும் இல்லை, பேசியதும் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரபாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில மாதங்களாக என் உடல்நலம் பற்றி பல்வேறு வதந்திகள் பரவுகிறது. என் நலம்விரும்பிகள் என் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுவருகிறார்கள். இது என் குடும்பத்தை வேதனை அடையச் செய்துள்ளது. இதற்கிடையே எனக்கும் ஒய்.எஸ். ஆர்.ஷர்மிளாவுக்கும் இடையே தொடர்பு என்று வதந்திகள் பரவியுள்ளது. அவரை நான் பார்த்ததே இல்லை. இந்த வதந்தி பொய்யானது. இதில் சிறிதளவும் உண்மை இல்லை. முன்பு என் உடல்நலம் பற்றி வதந்தி குறித்து பதில் அளித்தேன். காரணம் பதில் அளித்தாலாவது அது பற்றி பேசமாட்டார்கள் என்று தான். ஆனால் வதந்திகளை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நல்லது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் பிறரை பாதிக்கும் வதந்தி குறித்து கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அதனால் தான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறேன். வதந்தியை பரப்புவோர் திருமணமான, தாயான மதிப்புக்குரிய நபரை அவமதிக்கிறார்கள். உங்களுக்கு தெரிந்தது போன்று எனக்கு அரசியல் ஆசை இல்லை. வதந்தியை கேட்டு வேதனை அடைந்ததாலும், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் தான் அறிக்கை வெளியிடுகிறேன். வதந்தியை பரப்புவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆந்திர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து உள்ளனர். ஒருவர் அமெபரெ பேட் சங்கர் நகரை சேர்ந்தவர் பெயர் ஸ்ரீபதி நரேஷ் (வயது 29)  இவர் வெப் டிசைனராக உள்ளார். மற்றொருவர் ஜன்னப்பு ரெட்டி கார்த்திக் (வயது 32) நயீம் நகரை சேர்ந்தவர்.மேலும் 4 நபர்களை தேடிவருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.