Header Ads

நிர்வாண வீடியோவை இணையதளத்தில் வெளீயிடுவதாக பெண் என்ஜினீயரிடம் மாடல் அழகி பெயரில் மிரட்டல்

நான் ஏப்ரல் 1 ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் எனது படுக்கைக்கு சென்றேன் ஆனால் உறங்கவில்லை. நான் காலை 3 மணிக்கு  எனது பேஸ் புக் கணக்கை ஒப்பன் செய்தேன் அதில் டிம்பிள் செர்லி என்ற பெயரில்  ஒரு தகவல் இருந்தது . அந்த பெயரில் உள்ளவரை பேஸ்புக் கணக்கில் சென்று பார்க்கும் போது.டிம்பிள் செர்லி கர்நாடகத்தை சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு மாடல் அழகி என்றும் இருந்தது.

பின்னர் டிம்பிள் என்னை ஒமிக்லி( (Omegle அந்நியர்கள் பேச என்ற தலைப்புடன் இது செய்ல்படுகிறது. இதில் ஆன்லை சாட்,வாய்ஸ் சாட், வீடியோ சாட் என பேசி கொள்ளலாம்) என்ற என்ற இணைய தளத்திற்கு வருமாறு கூறினார். நாம் வெப் கேமிரா வழியாக நேருக்கு நேர் பேசிக்கொள்ளலாம் என கூறினார்.பிறகு அவர் என்னை  வெப் கேமிராமுன் ஆடை இல்லாமல் இருக்க சொன்னார். உன்னை அப்படி பார்க்க ஆர்வமாக இருக்கிறது என கூறினார்.பின்னார் அவர் எனது ஆடையை முற்றிலும் நீக்குமாறு கூறினார் என புகாரில் கூறி உள்ளார்.

ஆனால் இந்த பெண் என்ஜினீயருக்கு அவரின் படங்கள் எல்லாம் வீடியோவில் டேப் செய்யபட்டது தெரியாது. மேலும் அவர் கூறி உள்ளதாவது. பின்னர் நான் எனது அந்தரங்கங்களையும் அம்பலபடுத்தினேன். நான் அந்த பெண்ணை  பேஸ் புக் கணக்கிற்கு வருமாறு கூறினேன்.ஆனால் அவர் ஆன் லைனில் வரவில்லை.ஆனால் அவரிடம் இருந்து எனக்கு ஒரு குறுந்தகவல் காலை 3.17க்கு வந்தது. அதில் ஒரு யூடியூப் லிங்க் இருந்தது. அந்த லிங்கை பார்க்கும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் எனது  நிர்வாண வீடடியோ அப்லோடு செய்யபட்டு இருந்தது. என புகாரில் தெரிவித்து உள்ளார்.

வீடியோவை அகற்றவேண்டும் என்றால் இந்த நம்பர் கணக்கில் ரூ 10 ஆயிரம் போடுமாறு   என்னிடம் பேரம் பேசினார்.நான் அடுத்த மறுநாள் அந்த கணக்கிற்கு ரூ 10 ஆயிரம் பணம் போட்டேன்.பின்னர் அவரது பேஸ் புக் கணக்கை எனது கண்ண்க்கில் இருந்து நீக்கினேன்.

மறுநாள் எனது மொபைல் போனில் ஒரு தகவல் வந்தது. அதில் எனக்கு மேலும் ரூ 5. ஆயிரம் வேண்டும். என கேட்டார். மேலும் ஏப்ரல் 25 ந்தேது ஒரு தகவல் வந்தது யூடியூப்பில் உனது வீடியோவை அப்லோடு செய்து விடுவதாக மிரட்டினார். அவர் அனுப்பிய நம்பர் மூலம்  டிரேஸ் செய்ததில் அந்த சிம் கார்டு நிகில் ஷெட்டி என்பவர் பெயரில் உள்ளது என கூறி உள்ளார்.

என அந்த புகாரில் கூறி உள்ளார்.

புகார் குறித்து பந்தப் போலீஸ் அதிகாரி பிரசாந்த் மர்டே கூறும் போது இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடி உள்ளோம்.குற்றவாளி மீது இந்திய தண்டனை சட்டம்  294,384,506,34,ஆகிய பிரிவுகளின் கீழ் வழ்க்குபதிவு செய்யபட்டு உள்ளதாக கூறினார்.

No comments:

Powered by Blogger.