Header Ads

மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன? இதோ தகவல்கள்

இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது.



 * தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் படையினரை இயன்றளவு விரைவில் வெளியேற்றி, உடனடியாக அந்தப் பொறுப்புக்களை பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும்.

* பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபையிடம் கையளிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டும்.

* ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். - இந்த நான்கு விடயங்களையுமே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, திட்டவட்டமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவிடம் எடுத்துக் கூறினார் என புதுடில்லி ராஜதந்திர வட்டாரங்கள் தகவல் தந்தன.

நேற்று இந்தியப் பிரதமர் - இலங்கை ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு சுமார் 20 நிமிட நேரமே நீடித்தது. எனினும், எந்த இழுபறியுமின்றி எடுத்த எடுப்பிலேயே நேரடியாக விடயத்தைக் கையாளும் ஓர் இறுக்க நிலையே அந்த இருபது நிமிட நேரமும் நீடித்தது என நம்பகரமாக அறியவந்தது.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தல், படையினரை விலத்தி பொலிஸாரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தல், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைக்குக் கையளித்தல் ஆகிய மூன்று விடயங்களையும் எடுத்த எடுப்பிலேயே இந்தியப் பிரதமர் பிரஸ்தாபித்தாராம்.

அவற்றைச் செயற்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்குமாயின் இந்தியா நேரடியாகத் தலையிட்டு உதவத் தயாராக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டாராம். இந்தியப் பிரதமரின் காட்டமான இந்தக் கருத்துக்கு நேரடியாகப் பதில் கூறமுடியாத இலங்கைத் தரப்பு இந்த விடயங்களை ஒரே நாளில் நடைமுறைப்படுத்தி விடமுடியாது, இப்போதுதான் யுத்தம் முடிவடைந்திருக்கின்றது, இன்னும் காலம் பிடிக்கும் என்ற சாரப்பட பதிலளிக்க முயன்றதாம். "இல்லை, இல்லை. ஏற்கனவே யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. இதற்கு மேலும் காலம் தேவைப்படும் என்று கூறுவது அர்த்தமற்றது." - என்ற பாணியில் பதிலளித்த இந்தியப் பிரதமர் தமது வெளிவிவகாரச் செயலாளர் சுஜாதா சிங் பக்கம் திரும்பி, ஏற்கனவே இந்தியப் பிரதமராகவிருந்த மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தரப்பில் கூறப்பட்ட உறுதிமொழி என்ன என்று கேள்வி எழுப்பினராம்.

No comments:

Powered by Blogger.