Header Ads

சுனைனாவுக்கு நம்பிக்கை கொடுத்த விஜயசேதுபதி!

நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமானவர் சுனைனா. தெலுங்கு நடிகையான இவர் அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, சமர், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், நீர்ப்பறவை உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் சில படங்கள் சுமாரான வெற்றி பெற்றபோதும், பல படங்கள் தோல்வியடைந்தன.

இதனால், ஒரு கதாநாயகிக்குரிய அழகு, திறமை என அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்தபோதும் ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்டார் சுனைனா. அதனால் ஒருகட்டத்தில் தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் மனசொடிந்து போன சுனைனா, தனது பெயரை அனுஷா என்று மாற்றிக்கொண்டு மீண்டும் தற்போது களமிறங்கியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தயாரிதது நடித்துள்ள நம்பியார் படத்தில் நடித்திருப்பவர், அதையடுத்து விஜயசேதுபதி நடிக்கும் வன்மம் படத்திலும் நாயகியாகியிருக்கிறார். அதனால் ஸ்ரீகாந்துடன் நடித்தபோதுகூட பெரிய நம்பிக்கை ஏற்படாத சுனைனாவுக்கு இப்போது விஜயசேதுபதியுடன் ஜோடி சேர்ந்ததும் தமிழில் தனது மார்க்கெட் இனிமேல்தான் சூடு பிடிக்கப்போகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.

அதனால் இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஓரளவு குறைத்து நடித்து வரும் சுனைனா, இனிமேல் மார்க்கெட்டில் பேசப்படும் நடிகர்களின் படங்களாக மட்டுமே செலக்ட் பண்ணி நடிப்பாராம்.

No comments:

Powered by Blogger.