Header Ads

பைனான்ஸ் பிரச்னை! ஷங்கரின் ஐ படம் ரிலையன்சுக்கு கைமாறுகிறது?

ஷங்கர் படமென்றாலே பிரமாண்டம்தான். படம் தொடங்குவதற்கு முன்பு ஒரு பட்ஜெட் போட்டால், அரை கிணறு தாண்டும்போதே ஏற்கனவே போட்ட பட்ஜெட் கிட்டத்தட்ட எகிறிவிடும். அந்த வகையில், இதற்கு முன்பு ஷங்கர் இயக்கிய எந்திரன் உள்பட சில படங்களுக்கு இதேநிலை ஏற்பட்டிருககிறது. எந்திரன் தடுமாறிக்கொண்டு நின்றபோதுகூட, ரஜினி-ஷங்கர் இருவரும் அதை வேறு நிறுவனத்திடம் பின்னர் கைமாற்றி விட்டனர்.

அதையடுத்து இப்போது ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்திற்கும் அதேபோல் பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் சில காட்சிகளும், ஒரு பாடலும்தான் பேலன்ஸ் உள்ளது. இந்த நிலையில், தனக்கு பேசப்பட்ட பணம் வரவில்லை என்று கோபித்துக்கொண்டு லண்டனுக்கு பறந்து விட்டார் எமிஜாக்சன். அவர் நடிக்க வேண்டிய இன்னும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.

இதேபோல் மேலும் சில கலைஞர்களுக்கும் சம்பள பாக்கி இருந்தபோதும் அவர்கள் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை, ஷங்கர் எப்படியாவது படத்தை கரையேற்றி நமக்கு தர வேண்டியதை சல்லி பைசா பாக்கி இல்லாமல் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஐ படத்தை கைமாற்றி விட்டு இறுதிகட்ட பணிகளை முடிக்க ஷங்கர்தரப்பு முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Powered by Blogger.