Header Ads

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்ளாதது ஏன்?



இந்தியாவின் 15வது பிரதமாராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். சார்க் நாட்டு தலைவர்களும், இந்திய முன்னாள் பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்க கோலாகலமாக நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இருவருமே நேற்றைய விழாவில் கலந்து கொள்ளவில்லை.

ரஜினி

ரஜினி நடித்து வரும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது ஆல் ஆர்ட்டிஸ்ட் காமினேஷன் எனப்படும் அனைத்து நடிகர் நடிகைகளும் பங்கேற்று நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் படப்பிடிப்பு நடக்காவிட்டாலும் தயாரிப்பாளருக்கு 25 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும். ஆகவே ரஜினி பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை. என்று ரஜினி தரப்பில் காரணம் கூறப்படுகிறது. என்றாலும் ரஜினி சார்பில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுசும் சென்றிருந்தனர்.

விஜய்

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் கத்தி படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இந்தப் படத்தை தீபாவளிக்கு கொண்டு வரும் தீவிரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இடையில் கிடைத்த ஒரு நாள் கேப்பில் விஜய் தன் குடும்பத்தினரையும், மேஜர் முகுந்தன் வீட்டிற்கும் சென்று விட்டு வந்து விட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் மோடியை டில்லியில் சந்தித்து வாழ்த்து சொல்வார் என்று விஜய் தரப்பு கூறுகிறது.

காரணம் என்ன?

ஆனால் இருவருமே மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது அதில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே கலந்து கொள்வதுதான் என்று கூறப்படுகிறது. ராஜபக்ஷேவின் வருகைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக முதல்வரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இந்த நிலையில் நாம் கலந்து கொண்டால். அது தமிழர்களுக்கும், தமிழர் நலனுக்கும் எதிரான செயலாக பார்க்கப்படும். அதோடு தமிழக அரசின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதாலேயே இருவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே போர்குற்ற விசாரணையில் இருந்து தப்பிக்க எப்படியாவது இந்திய அரசின், மக்களின் நல்லெண்ணத்தை பெற நினைக்கிறார். அதற்காகவே இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்கிறார். தமிழ் நாட்டில் இருந்து முக்கிய நடிகர்களான ரஜினியோ, விஜய்யோ வந்தால் அவர்களுடன் கைலுக்கி பாராட்டும் திட்டமும் வைத்திருந்தாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அந்த புகைப்படங்கள் தங்களுக்கு எதிராக திருப்பப்படும் என்பதால் இருவரும் கலந்து கொள்ளவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Powered by Blogger.