Header Ads

ஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாள் சிறை!

பேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் 'புறம்போக்கு'. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை யுடிவிக்காக ஜனா பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இதுவரை குலுமனாலி மற்றும் புனேயில் நடந்தது.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னை பின்னி மில்லில் நடக்கிறது. இதற்காக அங்கு சுமார் 2 கோடி செலவில் சிறைச்சாலை செட் போடப்பட்டுள்ளது. சுமார் 300 தொழிலாளர்கள் ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் தலைமையில் கடந்த ஒரு மாதமாக இந்த செட்டை அமைத்து வருகிறார்கள்.

இதுபற்றி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கூறியதாவது: புறம்போக்கு படக் கதையின் முக்கிய பகுதிகள் சிறைச்சாலையில் நடக்கிறது. இதில் ஆர்யா, விஜய்சேதுபதி, சாம் நடிக்கும் காட்சிகள் படம்பிடிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறைச்சாலைகளை போய் பார்த்தோம். மிகுந்த பாதுகாப்புள்ள சிறைச்சாலைகளில் படம்பிடிக்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். அனுமதி கிடைக்கும் சின்ன சிறைச்சாலைகள் நான் எதிர்பார்த்ததுபோல இல்லை.

அதனால் சிறைச்சாலையை செட் போடுகிறோம். பல சிறை அதிகாரிகளை சந்தித்து, பல சிறைகளை பார்த்து மிக நேர்த்தியாக இந்த சிறை வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சினிமாவில் காட்டப்படும் சிறைக்கும், சிறை காட்சிகளுக்கும் நிஜமான சிறைச்சாலைக்கு சம்பந்தம் இருக்காது. இதில் சிறையை அப்படியே யதார்த்தமாக பதிவு செய்கிறோம். இந்த செட்டில் 65 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கிறது என்றார்.

No comments:

Powered by Blogger.