Header Ads

எம்எச் 370 விமானம் குறித்த உண்மையை கண்டறிய வேண்டும் பயணிகளின் உறவினர்கள் கடிதம்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் மார்ச் 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  இந்திய பெருங்கடலில்  மாயமான மலேசிய விமானத்தை தேடும்பணி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

 விமானம் மாயமாகி 76 நாட்கள் ஆகிறது. தேடுதல் வேட்டையில் அமெரிக்கா. ஆஸ்திரேலியா  போர் விமானங்கள், கப்பல்கள், ஈடுபட்டு உள்ளன. ஆனால் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள்  தங்களுக்கு விமானத்தின் நிலை குறித்து இதுவரை உணமையான  பதில் எதுவும் கூறப்படவில்லை என மிகவும் கோபத்தில் உள்ளனர். எம்எச்370 விமான்ம் குறித்து உண்மையை கண்டறிய கோரிக்கை விடுத்து ஆஸ்திரேலிய பிரதமருக்கும்,மலேசிய பிரதமருக்கும் 18 பக்க கடிதம் எழுதி உள்ளனர். கடிதத்தில் மலேசிய அரசு வெளியிட்ட  முதல் கட்ட அறிக்கை குறித்து புகார் கூறபட்டு உள்ளது அதில் பல்வேறு தகவல்கள் மறைக்கப்பட்டு உள்ளன என கூறி உள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், மற்றும் மலேசிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இந்த கடிதம் அனுப்பிவைக்கபட்டு உள்ளது.கடிதம் அனுப்பி வெகு நாட்களாகியும்  இந்த கடிதத்தின் மீது அரசு அதிகாரிகள் எந்த பதிலும் இல்லை. ஆனால் அவர்கள் தொடர்பு கொள்ளாதது எங்களுக்கு  ஆச்சரியமாக இல்லை என கடிதம் எழுதிய குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Powered by Blogger.