Header Ads

10 எண்றதுக்குள்ளே - விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பெயர்!

சுமார் இரண்டு வருடங்களாக ஐ படத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விக்ரம் வேறு எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. எத்தனையோ படங்கள் தேடி வந்தபோதும் அவர் ஏற்காமல் இருந்தார். கடந்த மாதம் ஐ படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து வேறு படங்களில் நடிக்கலாம் என்று விக்ரமுக்கு அனுமதி கொடுத்தார் இயக்குநர் ஷங்கர். அதன் பிறகு கதை கேட்க ஆரம்பித்த விக்ரம், கோலிசோடா வெற்றிப்பட இயக்குநர் விஜய்மில்டன் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆகி உடனடியாக நடிக்க சம்மதித்து கால்ஷீட் கொடுத்தார்.

விஜய்மில்டன் இயக்கத்தில், விக்ரம் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். இந்நிலையில் படத்துக்கு ''10 எண்றதுக்குள்ளே'' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். 10 எண்றதுக்குள்ளே என்ற தலைப்பைப் பார்த்தால் ஆக்ஷன் படம் போன்ற எண்ணம் ஏற்படுகிறதே? என்று கேட்டால் அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார் இயக்குநர் விஜய்மில்டன்.

No comments:

Powered by Blogger.