Header Ads

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் இயக்குனரானார் பிரபு தேவா

தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற பிரபுதேவா அடுத்த படத்தை இயக்க ரூ. 30 கோடி சமபளம் நிர்ணயம் செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனமூலம் பாலிவுட்டில் மிக அதிகம் சம்பளம் வாங்கிய இயக்குனர் ரோஹித் ஷெட்டியை பிரபுதேவா
முந்திவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்திய இயக்குனர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகை சம்பளம் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

பாலிவுட்டில் இதுவரை 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வந்தவர் ரோஹித் ஷெட்டி மட்டுமே. இவரை பின்னுக்கு தள்ளிவிட்டார் இயக்குனர் மற்றும் நடன அமைப்பாளர் பிரபுதேவா. அடுத்து இவர் இயக்கவுள்ள படத்திற்கு ரூ.30 கோடி பேசப்பட்டு, ரூ.17 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

41 வயதான பிரபுதேவா, நடன அமைபபளர் சுந்தரத்தின் மகன் ஆவார். 1973ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த இவர், தனது 15 வயது வயதிலேயே நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகம் ஆனார்.வெற்றி விழா படம் மூலம் சினிமா உலகில் நுழைந்தார் , தொடர்ந்து அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு அறிமுகம் ஆன பிரபுதேவா, அதன் பின்னர் இதயம்,சூரியன்,பிரதாப் போன்ற படங்களுக்கு நடன இயக்குனராகவும், ஒரு பாடலுக்கு ஆடும் நடிகராகவும் வலம் வந்தார்.

1994ஆம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் வெளியான 'இந்து' திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். அதன் பின்னர் காதலன், ராசையா,லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ போன்ற பல படங்களில் நடித்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு போக்கிரி படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக மாறிய பிரபுதேவா, அதே படத்தை இந்தியில் வாண்டட் என்ற பெயரில் சல்மான்கானை வைத்து இயக்கினார். அந்த படத்தின் மாபெரும் வெற்றி அவருக்கு அடுத்தடுத்து பாலிவுட் வாய்ப்பை தேடித்தந்தது. அதன் பின்னர் ரவுடி ரத்தோர், ராமய்யா வஸ்தாவய்யா,ஆர்.ராஜ்குமார் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ஆக்சன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் 1997  ல் மினசார கனவு,2004  லக்‌ஷய்யா படங்களுக்காக  சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதுகளை பெற்று உள்ளார்.

No comments:

Powered by Blogger.