Header Ads

இந்திய சினிமாவில் கோச்சடையான் மைல்கல் படம்: லதா ரஜினிகாந்த் பேட்டி..

ரஜினியின் கோச்சடையான் படம் அடுத்த மாதம் (மே) 9–ந்தேதி ரிலீசாகிறது. ஆறு மொழிகளில் இப்படம் வருகிறது. அவதார், டின்டின் ஹாலிவுட் படங்கள் சாயலில் இது எடுக்கப்பட்டு உள்ளது. கோச்சடையான் படம் குறித்து ரஜினி மனைவி லதா கூறியதாவது:– 

கோச்சடையான் படத்துக்கு நிதி நெருக்கடி உள்ள தென்றும் இதனால் ரிலீஸ் தாமதமாகும் என்றும் செய்திகள் பரவி உள்ளன. இது வதந்திதான். எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் மே 9–ந்தேதி ரிலீசாகிறது. ஆறு மொழிகளில் கோச்சடையான் வருகிறது. இதை கஷ்டமான காரியமாக நான் நினைக்கவில்லை. இப்படம் மூலம் ஒரு வரலாறை நிகழ்த்தி உள்ளோம். இந்திய சினிமாவில் இதற்கு முன் இது போல் பார்த்திருக் மாட்டார்கள். ஹாலிவுட் படமான அவதார் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அந்த அளவு செலவிட்டு நம்மால் படம் எடுக்க முடியாது. ஆனாலும் அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். இதில் நேரம், செலவு ரஜினியை எப்படி காட்டுவது என்பதில் எல்லாம் பெரிய சவால்கள் இருந்தன. 

இந்த படத்தை எடுப்பது சவுந்தர்யாவுக்கு ஒரு சுமையாகவே இருந்தது. தந்தை மேல் நம்பிக்கை வைத்து எடுத்தார். 100 ஆண்டு இந்திய சினிமாவில் கோச்சடையான் ஒரு மைல்கல் படமாக இருக்கும். அமிதாப்பச்சன், ஹாலிவுட் படங்களை அவதார் படத்துக்கு முன்பு பின்பு என்பது போல் இந்திய படங்களை கோச்சடையான் படத்துக்கு முன்பு பின்பு என வகைபடுத்தலாம் என்றார். பெருமையாக உள்ளது. 

ரஜினி உடல் நலம் குன்றி இருந்த போது நிறைய பேர் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். அதுவே அவரை குணமாக்கியது. கடவுள் அருளால் இப்போது நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார். எப்போதுமே அவர் தன்னை பெரிய ஆளாக நினைத்தது இல்லை. தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் ஒரு மாணவன் போல பதட்டமும் பரபரப்புமாகவே இருப்பார். ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தினரோடு செலவிடும் முடிவை அவரிடத்திலேயே விட்டுள்ளோம். எதை செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் விருப்பம் போல் முடிவு எடுக்கலாம். 

ரஜினி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். உள் மனது என்ன சொல்கிறதோ அதை செய்வார். ரசிகர்களுடன் உட்கார்ந்து நான் படங்கள் பார்த்துள்ளேன். அவர் பார்த்தது இல்லை. எங்கு போனாலும் அவரது நடையை வைத்து மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.