Header Ads

படப்பிடிப்பில் தாக்கிய குத்து சண்டை வீராங்கனை கிழே விழுந்த நடிகை பிரியங்கா சோப்ரா

ஒலிம்பிக்கில் குத்து ச்ண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் வீராங்கனை மேரி கோம் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி மேரி கோம் என்ற  இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா குத்துசண்டை வீராங்கனையாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வடகிழக்கு மாநில குத்துச்சண்டை வீராங்கனை ஒருவரும் நடிக்கிறார். இந்த படத்தை சஞ்சய்லீலா பஞ்சாலி தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தர்மசாலாவில் நடந்தது.  அப்போது பிரியங்காவுடன் குத்துசண்டை வீராங்கனை இருவரும் மோதும் காட்சி படப்பிடிப்பு சமீபத்தில் தர்மசாலாவில் நடந்தது. இதில் வட மாநிலத்தை சேர்ந்த  வீராங்கனை தவறுதலாக விட்ட ஒரு குத்து, பிரியங்காவின்  கன்னத்தில் விழுந்தது. இதில் கண்களுக்கு கீழே காயம் ஏற்பட்டதால், ப்ரியங்கா சோப்ரா நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தால் இயக்குனர்  உமங் குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தபட்டது. நடிகை பிரியங்காவுக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்தார். ஒருமணி நேரம் ஓய்வுக்கு பின்னர் ப்ரியங்கா சோப்ரா மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவருக்கு ஏற்பட்ட உண்மையான காயத்தை படத்தில் பார்க்கலாம் என படக்குழுவினர் கூறினர்.

இந்தபடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று வெளியாகிறது.

இதுகுறித்து ப்ரியங்கா சோப்ராவின் மேக்கப்மேன் உதய் ஷிர்லே  கூறும்போது, பிரியங்காவின் கன்னத்தில் குத்த முயற்சிக்கும்போது அவர் கையால் தடுக்கும் காட்சிதான் எடுக்கப்பட இருந்தது. ஆனால் பிரியங்கா சில நொடிகள் தாமதமாக தடுக்க முற்பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் நல்லவேளையாக பெரிய காயம் எதுவும் இல்லை என்பது ஒரு ஆறுதல். இந்த காயத்தை படத்தில் உண்மையாகவே பயன்படுத்திக்கொள்ளலாம் என இயக்குனர் ஐடியா கொடுத்ததால் காயத்துடனே அவர் நடிப்பை தொடர்ந்துள்ளார்" என்று கூறினார்.

No comments:

Powered by Blogger.