Header Ads

செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, ஆணின் ஆயுளுக்கும் ஒய்-குரோமோசோம் அவசியம்

ஆண்களுக்கு 'ஒய் குரோமோசோம்' செக்ஸ உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும் முக்கிய காரணியாக உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு ஆயுள் குறைவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது ஆண்களில் ஆயுள் எதனால் குறைகிறது என்பதை பிரிட்டனில் உப்சலா பல்ககைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

ரத்த செல்களில் ஒய் குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை கேன்சர் உள்ளிட்ட நோய் தாக்குவதாகவும் ஆய்வில் அறியப்பட்டுள்ளது. உலக அளவிலான ஆராய்ச்சியார்கள் குழு ஒன்று வயது முதிர்ந்தவர்கள் 1600 பேரின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்ததில் அவர்கள் அனைவருக்கும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் ஒய் குரோமோசோம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. 

இதனாலேயே ஆணின் ஆயுள் குறைகிறது என்றும் தெளிவாக புரிகிறது. இந்தியாவில் கேரள கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தான் மிக அதிகமாக 77.2 வயது வரை வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.