Header Ads

ஐ.பி.எல். சீசன் 7 : மும்பையை வீழ்த்தியது சென்னை

துபாய்: சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோகித்சர்மா 50 ரன்கள் எடுத்தார். சென்னை பந்து வீச்சில் அபாரமாக பந்து வீசிய மோகித்சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

சென்னை அணியில் அதிகபட்சமாக பிரெண்டன் மெக்கல்லம் 71 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.  இதன் மூலம் சென்னை அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். இதே போல் மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

No comments:

Powered by Blogger.