Header Ads

விஜய்யின் நடனம் எனக்கு உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது -நடிகை சமந்தா

நடிகர் விஜய் நடிக்கும் 57-வது படம் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் நடிகை சமந்தா நடிக்க இருக்கிறார்கள். படத்தை இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடியது குறித்து தனது  டிவிட்ட பக்கத்தில்  நடிகை சமந்தா கூறியிருப்பதாவது:-

நடிகர் விஜயுடன் அவரது  57 வது படத்தில் நான் நடிக்கிறேன்.  ஹைதாராபத்தில் படம் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் விஜயுடன் ஒரு பாடலில் நான் நடனமாடினேன் அவருடன் நடனமாடும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது.அவரின் நடனம் எனக்கு உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது. படத்தில் வேகமான துடிப்புடன் நடனம் ஆடியுள்ளார் நடிகர் விஜய் என்று தனது டிவிட்டரி நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.