Header Ads

விஷால் - லட்சுமி மேனன் முத்தக் காட்சி லீக் ஆனதால் பரபரப்பு ..

விஷால், லட்சுமி மேனன், இனியா, சுந்தர், ஜெகன் நடிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. இப்படம் ஏப்ரல் 11ம் தேதி திரைக்குவருகிறது.

இந்த சமயத்தில் படத்திற்கு சிக்கல் வந்துள்ளது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு, படத்தில் வரும் முத்தக் காட்சியை நீக்கும்படி சொல்லியிருக்கிறது.



அது படத்திற்கு முக்கியமான காட்சி என விஷால் தரப்பு கூற, முத்தக்கட்சியை நீக்கினால் தான் 'யூ' சான்றிதழ் வழங்குவோம் இல்லை எனில் 'யூ/ஏ' சான்றிதழ் தான் வழங்கப்படும் எனத் தணிக்கைக்குழு  தெரிவித்திருக்கிறது.

முத்தக்காட்சியை நீக்கிவிட்டு 'யூ' சான்றிதழ் பெறுவதா, இல்லை நீக்காமல் 'யூ/ஏ' சான்றிதழ் பெற்றுக்கொள்வதா என குழப்பத்தில் இருக்கிறதாம் விஷால் தரப்பு.

No comments:

Powered by Blogger.