Header Ads

பிரசாரத்தில் நக்மாவை பார்க்க மக்கள் கூட்டம் திரள்கிறது

நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த வாரம் வேட்பு மனுதாக்கல் செய்த அவர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நக்மா பிரசாரத்தை தொடங்கிய மறுநாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த அவரை கூட்ட நெரிசலை பயன்படுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் முத்தமிட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. அதை நக்மா மறுத்தார்.

பிறகு மற்றொரு நாள் பிரசாரத்தின்போது தன்னை நெருங்கி வந்த தொண்டரை நக்மா அடித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

நக்மாவை பார்க்க மக்கள் கூட்டம் தினமும் திரள்கிறது. மீரட் தொகுதியின் எந்த பகுதிக்கு சென்றாலும் நக்மாவை பார்க்கவும், அவரிடம் கை குலுக்கவும் நிறைய பேர் ஆர்வமுடன் வருகிறார்கள்.

சில கிராமங்களில் நக்மாவை சூழ்ந்து கொள்ளும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது. இதனால் நக்மா வாகனத்தில் இருந்து இறங்காமல் பிரசாரம் செய்து வருகிறார்.

மீரட் தொகுதிக்குள் நக்மா எங்கு சென்றாலும் மக்கள் திரள்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் நக்மாவுக்கு ஓட்டு போடுவார்களா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

நக்மாவை எதிர்த்து தற்போதைய அந்த தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ராஜேந்திர அகர்வால் போட்டியிடுகிறார். சமாஜ்வாடி கட்சி தன் அமைச்சர்களில் ஒருவரான சாகித் மன்சூரை களம் இறக்கியுள்ளது.

இந்த தொகுதியில் உள்ள கணிசமான முஸ்லிம் ஓட்டுக்களை நம்பி அவர் நிறுத்தப் பட்டுள்ளார். ஆனால் முஸ்லிம்கள் ஓட்டுக்களை குறி வைத்து நக்மாவும் பிரசாரம் செய்து வருகிறார்.

ஓட்டுக்கள் சிதறுவதால் மீரட் தொகுதியில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

No comments:

Powered by Blogger.