Header Ads

காங்கிரஸ் பிரசாரத்துக்கு நக்மா வருவாரா? : ஞானதேசிகன் பதில் -

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சினிமா நட்சத்திரங்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சினிமா நட்சத்திரங்களுக்கு எந்த கட்சியும் வாய்ப்பளிக்கவில்லை என்ற போதிலும் பிரசார பீரங்கிகளாக அவர்களை முக்கிய கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை நடிகை குயிலி, விந்தியா, நடிகர்கள் செந்தில், ஆனந்தராஜ், ராமராஜன், குண்டு கல்யாணம் என ஒரு நடிகர் பட்டாளமே பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

திமுகவை பொறுத்தவரை நடிகை குஷ்பு, வாகை சந்திரசேகர் என பலர் களத்தில் குதித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். இவர் தமிழகத்தில் முக்கிய ஹீரோக்களுடன் திரைப்படங்களில் வலம் வந்தவர். தமிழக மக்களுக்கு மிகவும் அறிமுகமான நடிகை என்பதால், தமிழகத்தில் தனித்து போட்டியிடும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா, திரையுலகினர் வேறு யாராவது காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்களா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். 

இதற்கு,ÔÔஉங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்’’ என்று கூறினார். அதிமுக, திமுகவில் நட்சத்திரங்கள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர், நடிகைகளை களம் இறக்கவும் காங்கிரசார் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், ‘பல கோடி செலவாகுமே, யார் செலவழிப்பது’ என்று ஞானதேசிகன் தெரிவித்தார். 

No comments:

Powered by Blogger.