Header Ads

நாடே சோகத்தில் மூழ்கி இருக்க கோல்ப் விளையாடும் மலேசிய ராணி

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு  மீண்டும் தொடங்கி உள்ளது.  

மாயமான மலேசிய விமானத்தில் 153 சீனர்கள்,38 மலேசிய பயணிகள்,7 இந்தோனேஷியர்கள்,6 ஆஸ்திரேலியன்,5 இந்தியர்கள், 4 பிரஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள்,3 அமெரிக்கர்கள், 2 நியூசிலாந்து,உக்ரைம், கனடா நாட்டை சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ரஷ்யா,தைவான்,நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் தலா ஒருவர். பயணம் செய்து உள்ளனர்.

விமான என்ன ஆனது என்பது குறித்து தெரியாத நிலையில் பயணிகளின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். அவர்களின் சோகத்தில் அந்த நாட்டினரும்   பங்கேற்று உள்ளனர்.  இந்த நிலையில் மலேசிய ராணி ராஜா அகோங் தவுன்கு ஹாஜாக்  ஹமினாக் (Raja Agong Tuanku Hajah Haminah)   கிலன்மேரி கோல்ப் மற்றும் கண்ட்ரி கிளப்  புதன் கிழமை  கோலாலம்பூரில் நடத்திய . ஈரீ ஆசிய கோப்பை கோல்ப் போட்டியில் கலந்து கொண்டு  மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதாக உள்ளூர் பத்திரிகைகள்  புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டிய ராணி, இவ்வாறு பொறுப்பில்லாமல் இருப்பது குறித்து மலேசிய ஊடகங்கள் கண்டித்துள்ளன

No comments:

Powered by Blogger.