Header Ads

அமெரிக்க தீர்மானத்தை ஏற்க இலங்கை மறுப்பு.....இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று விவாதம் நடத்தப்படுகிறது. இதில் ஐ.நா. உறுப்பு நாடுகள் பங்கேற்றுள்ளன. 

விவாதத்தில் பங்கேற்ற இலங்கை பிரதிநிதி, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருப்பது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், சர்வதேச விதிகளுக்கு எதிராக அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார். 

மேலும், அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவு தீர்மானத்தை எதிர்ப்பதாக கூறிய இலங்கை பிரதிநிதி, மற்ற உறுப்பு நாடுகளும் இதனை எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்..........ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.


இதில் பங்கேற்று பேசிய இந்திய பிரதிநிதி, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை இந்தியா ஏற்கவில்லை என்று தெரிவித்தார். இந்த தீர்மானம் நிறைவேறினால் இலங்கை மேற்கொண்டு வரும் பணிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  



“13-வது சட்டத்திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும். வடக்கு மாகாண தேர்தல் நடத்தியதை இந்தியா வரவேற்கிறது. அண்டை நாடு என்ற முறையில் இலங்கையில் இந்தியா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Powered by Blogger.