Header Ads

அஸ்வின், யுவராஜ் அபாரம்: ஆஸி.யை நசுக்கியது இந்தியா,,

அஸ்வினின் பந்துவீச்சு, யுவராஜ் சிங்கின் பேட்டிங் துணையுடன், ஆஸ்திரேலியாவை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இப்போட்டியில் 160 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக, மேக்ஸ்வல் 23 ரன்களையும், வார்னர் 19 ரன்களையும், ஹாட்ஜ் 13 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களையே எடுத்தனர்.

இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 3.2 ஒவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்குமார், மோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியது.

முன்னதாக, யுவராஜ் சிங்கின் அசத்தல் ஆட்டத்தின் துணையுடன், டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றில், ஆஸ்திரேலியாவுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

மிர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்ய இந்தியாவை அழைத்தது.

துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானேவும் கோலியும் நிதானத்தைக் கடைப்பிடித்தனர்.

ரஹானே 19 ரன்களிலும், விராட் கோலி 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், யுவராஜ் சிங் மீண்டும் ஃபார்முக்கு வந்தவராக, ஆஸ்திரேலிய பந்துவீச்சை விளாசினார். அவர் 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

ரெய்னா 6 ரன்களில் ஆட்டமிழக்க, யுவராஜுக்கு மறுமுனையில் உறுதுணையாக இருந்த கேப்டன் தோனி 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அஸ்வின் ஆட்டமிழக்காமல் 2 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இந்தியா தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் ஹாட்ஜ், மேக்ஸ்வல், ஸ்டார்க், வாட்சன், பொலிஞ்சர் மற்றும் மியூர்ஹெட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், சூப்பர் 10 சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வசப்படுத்தியது. இந்தியா ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.