Header Ads

நறுக் சுருக் சினிமா செய்திகள்..

அட்டகத்தி’ ஐஸ்வர்யாவுக்கு, வெற்றிமாறன் - தனுஷ் தயாரிப்பில் உருவாகும் 'காக்காமுட்டை’ படத்திலும் எஸ்.பி.பி சரண் தயாரிக்கும் 'திருடன் போலீஸ்’ படத்திலும் செம கேரக்டர்களாம். ஐஸு ஹேப்பி அண்ணாச்சி!

* 'கன்னியும் காளையும் செம காதல்’ படத்தில் கரண், திருப்தா என்ற புதுமுக நடிகையின் தொப்புளில் நெல்லிக்காயை உருட்டுவதைப் போல் 'வித்தியாசமாக’ யோசித்து எடுத்திருக்கிறார்கள். கப்பல் மட்டும்தான்யா விடல இன்னும்!



* ஹன்சிகா சிந்தி, தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு என சரளமாகப் பேசுவார். எட்டாவது மொழியாகத் தமிழையும் கற்றுக்கொண்டு 2015-ல் சொந்தக் குரலில் பேசுவது என்று முடிவெடுத்துள்ளார். பேசுறதா முக்கியம்!

* 'மகாபலி’ படத் தலைப்புக்கு ஆந்திராவில் சமண சமயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து டைட்டில் மாறவிருக்கிறது. இந்தப் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்து வெளியிட உள்ளார் ராஜ மௌலி. அனுஷ்காவுக்காக நாங்க வெயிட்டிங்!

No comments:

Powered by Blogger.