Header Ads

சினிமா செய்திகள்..

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில், இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருகிறாராம். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குநர் பொன்ராம்தான் டைரக்டர் என்கிறார்கள். சிரிப்பு போலீஸா... ஆக்ஷனா பாஸ்?



* கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிகளிலும் பிஸியாகிவிட்ட தமன்னாவிற்கு இடையழகைக் காட்டி போர் அடித்துவிட்டதாம். வில்லி வேடம் வேண்டும் என ஆந்திராவில் அறிக்கை விட்டுள்ளார். நல்லாத்தான போயிட்டிருக்கு!

 * தெலுங்கு அரசியலும் சினிமாவும் பிரிக்க முடியாதவை. இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாலகிருஷ்ணா நடிக்கும் 'லெஜன்ட்’ படத்தில் அண்ணன் - தம்பி என்று இரட்டை வேடங்கள். இதில் அண்ணன் வேடம் அரசியல்வாதி வேடமாம். வெங்கடேஷ் நடிக்கும் 'ராதா’ படத்தில் அவருக்கு ஹோம் மினிஸ்டர் வேடம். சிரஞ்சீவியும் தனது 150-வது படத்தில் நல்ல அரசியல்வாதியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா!

No comments:

Powered by Blogger.