Header Ads

அஜித்துடன் நடித்தே தீருவேன்! - அடம்பிடிக்கும் சமந்தா

சரும நோய் பாதிப்பு காரணமாக 'ஐ' படத்தைத் தவறவிட்டார் சமந்தா. ஆனால், அந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டோமே  என்று பெரிதாக வருத்தப்படுகிறார்.

இனி அதுபோன்ற ஃபீலிங் வந்துவிடக் கூடாதென்று வாய்ப்பு வேட்டையில் இறங்கியதும், இரு பெரிய பட்ஜெட் படங்களில் கமிட் ஆனார்.



லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் 'அஞ்சான்', ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் ஒரு படம் நடிப்பதால் மிகவும் குஷியாக இருக்கிறார்.

விரைவில் அஜித்துடன் நடிப்பேன். அதற்கான காலம் நெருங்கிவிட்டது. அடுத்த படத்திலேயே அது நடந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித்துடன் நடித்தே தீருவேன் என்று அடம்பிடிக்கிறாராம், சமந்தா. இதற்காக கௌமதம் மேனனிடம் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

No comments:

Powered by Blogger.