Header Ads

ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்: பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அறிவிப்பு

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் தனது போஜ்புரி மொழி திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் ராகுல் காந்தி விரும்பினால் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும் நரேந்திர மோடி சிறந்த மனிதர். தன்னை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும். இந்திய நாட்டின் அடுத்த பிரதமராக மோடி வரவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறினார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட் பா.ஜ.கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கினால் ஒற்றைக் காலில் நின்று தேர்தலை சந்திப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செய்து வரும் நிதிஷ்குமாரையும் அவர் பாராட்ட தவறவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி கூறும்போது, டெல்லி மக்களை அவர் முட்டாளாக்க முடியாது. தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் தான் அவர் ராஜினாமா செய்து விட்டதாகவும், இனி எப்போதும் அவர் மீண்டும் முதலமைச்சராக முடியாது என்றும் அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.