தமிழ் சினிமா கிசு கிசு
சமீபத்தில் மறைந்த இரண்டு சினிமா ஆளுமைகளுக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. வி.ஐ.பி-கள் 15 பேர் மட்டுமே கலந்துகொண்டனராம். 'இதில் கூட பாலிடிக்ஸ் பார்க்கிறார்களே’ என்று வருத்தப்பட்டார்களாம் சங்க நிர்வாகிகள்!
பஞ்ச் நடிகரின் படம் தயாராகும்போதே இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துக்குப் புதிய இயக்குநர் வேண்டாம் என தயாரிப்புத் தந்தையிடம் வேண்டுகோள் வைத்தாராம் உயிர் நடிகர். இப்போது படமும் அதே போல் நல்ல ரிசல்ட் காட்டாததால், அப்பா மீது கோபமாக இருக்கிறாராம் நடிகர்!
பழைய காதல் ஜோடி இப்போது கூட்டணி சேரும் படத்தில் இருவரும் சிரித்து மகிழும்படியான படத்தை இணையத்தில் உலவவிட்டதே இயக்குநர்தானாம்!
பஞ்ச் நடிகரின் படங்களில் நடித்த பிறகு சம்பளம் உயர்த்த நினைத்த நடிகைகள் பறவை, மில்க் ஸ்வீட் ஸ்டால் இருவருமே செம அப்செட்!
பறவை இயக்குநர் படப்பிடிப்பை முடித்து போட்டுப் பார்த்ததில் பல காட்சிகள் திருப்தி இல்லையாம். இதுவரை ஆறு கேமராமேன்களை மாற்றிவிட்டாராம். ஒளிப்பதிவாளர் சங்கத்தில் விரைவில் பஞ்சாயத்து உள்ளது!
No comments: