Header Ads

எனக்கு நரம்புதளர்ச்சி: கூறுகிறார் ஹன்சிகா

நரம்புதளர்ச்சியால் அவதிப்படுகிறாராம் ஹன்சிகா மோத்வானி.
மான் கராத்தே, அரண்மனை உள்ளிட்ட ஏழு படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ஹன்சிகா.

இந்நிலையில், தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும், இதனால் சில சமயங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஹன்சிகாவே டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதற்காக ஹன்சிகா மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லையாம்.

இதனால் நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார். இதற்காக விரைவில் கேரளா செல்ல திட்டமிட்டுள்ளாராம் ஹன்சிகா.

No comments:

Powered by Blogger.