Header Ads

தி.மு.க.வில் சேரவில்லை: டி.ராஜேந்தர் பேட்டி

சினிமா டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– கருணாநிதியை சந்தித்தீர்களே? தி.மு.க.வில் சேர்ந்து விட்டீர்களா?

பதில்:– கலைஞரை நான் சந்தித்தது ஒரு காட்சி. அதன் பிறகு நடப்பதற்கு பல காட்சிகள் உள்ளன. எல்லா காட்சிகளையும் இப்போதே சொல்லி விட முடியாது. மூன்று ரூபாய் கொடுத்து தி.மு.க. அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை என்பதற்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அந்த அட்டையை வாங்கினால்தான் தி.மு.க.வில் சேர்ந்ததாக அர்த்தம்.

பாரதீய ஜனதா கட்சியில் சேர என்னை அழைத்தனர். நான் மறுத்து விட்டேன் என் அரசியல் குரு ஆற்காடு வீராசாமி கையை பிடித்து அழைத்து போய் கலைஞரை சந்திக்க வைத்தார். காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததால் நானும் போனேன்.

கேள்வி:– தி.மு.க. – காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைத்தால் என்ன செய்வீர்கள்?

பதில்:– மறுபடியும் கூட்டணி உருவானால் காட்சி மாறும்.

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, ‘‘என் மகள் இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் அபிலாஷ். பிப்ரவரி 10–ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலாபேலசில் திருமணம் நடக்கிறது. இத்திருமணம் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது ஆகும். திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்று மாலை 6.30 மணிக்கு அதே ஓட்டலில் நடக்கிறது என்றார்.

No comments:

Powered by Blogger.