Header Ads

பனிக்கட்டியாக மாறிய ஏரி: கூட்டம் கூட்டமாக சிக்கித் தவிக்கும் மீன்கள்...

நோர்வேயில் உள்ள சிறு தீவு ஒன்றில் மைனஸ் -7.8 டிகிரி செல்சியஸிற்கு வெப்பநிலை நிலவுவதால் ஏற்பட்டுள்ள கடும் குளிரில் உறைந்துள்ள ஏரியின் ஒரு பகுதியில் மட்டும் மீன்களின் கூட்டம் நகர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த மீன்கள் இவ்வாறு வந்து மாட்டிக் கொண்ட அவல நிலைக்கு அவை வேறு ஏதேனும் பெரிய மீன் அல்லது விலங்கினால் வேட்டையாடப் படுவதற்காக விரட்டிக் கொண்டு வரப்பட்டமை காரணமாக இருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.
வழமையாக கடும் குளிரால் உலகின் சில பகுதிகளில் உள்ள ஏரிகள் உறையும் வேளையில் அதில் வசிக்கும் மீன்கள் முன்கூட்டியே பாதுகாப்பான திரவ நிலையில் நீர் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உறைந்துபோன ஏரிகளில் துரதிஷ்டவசமாக மாட்டிக்கொண்ட ஏனைய உயிரினங்களின் புகைப்படங்களையும் இங்கே காணலாம்.

No comments:

Powered by Blogger.