Header Ads

தாவுத் வெளிவந்தால் இமேஜ் டேமேஜ்: ஸ்ருதிஹாசன் கவலை

கடந்த ஆண்டு ஸ்ருதி ஹாசன் ஹிந்தியில்  நடித்து வெளியான படம் டி டே(D-Day). இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். அதனால் அந்த படத்தில் அவர் அதிகப்படியான கவர்ச்சியில் நடித்துள்ளார். இதற்காகவே இந்த படத்தை இளைஞர்கள் வெகுவாக ரசித்தனர்.

இந்தப்படம் தற்போது தமிழில் தாவுத் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர உள்ளது. இதனை அறிந்த ஸ்ருதிஹாசன் கரும் அதிச்சி அடைந்தாராம். இதன் மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் தனது இமேஜ் டேமேஜ் ஆகி விடுமோ என்று பயந்து தற்போது அந்தப்படம் தமிழில் ரிலீசாகக் கூடாது என்று அதை தடை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

என்னுடைய அனுமதி இல்லாமல் டி-டே படத்தை தமிழில் ரிலீஸ் செய்யக்கூடாது. மீறி வெளியிட்டால் அது என்னுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறியதாகும்.  அதனால் நான் அந்தப் படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறாராம் ஸ்ருதி.

No comments:

Powered by Blogger.