Header Ads

8 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு: தந்தையை கைது செய்த பொலிசார்...

ஏமன் நாட்டில் 8 வயதே ஆன சிறுமியை அவரது உறவுக்கார மைத்துனருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடத்திய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏமன் நாட்டின் வட மாகாணமான இப்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சிறுமியின் மாமா (இப்திகார்) என்பவரின் மூலம் ஊடகவியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்தக் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இச்சிறுமியின் தாயாருக்கு இத்திருமணத்தில் உடன்பாடு இல்லையென்றாலும் இவரது தந்தை அவரை விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி சம்மதிக்க வைத்துள்ளார்.
ஏமன் நாட்டில் நடக்கும் குழந்தை திருமணங்களை ஏமன் அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை குழுக்கள் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட இச்சிறுமியின் தந்தை, திருமண வயதை அடையும் வரை திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று உறுதியளித்துள்ளதால் தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏமன் சமூக விவகாரங்கள் அமைச்சகம் கடந்த 2010ம் ஆண்டில் வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, ஏமன் பெண்கள் நான்கில் ஒருவர் 15 வயதிற்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 12 வயதே நிரம்பிய ஒரு சிறுமி மூன்று நாட்களாக குழந்தையை பிரசவிக்க அவதிபட்டு மரணித்த செய்தி ஒன்றும் பதிவாகியுள்ளது. ஏமன் நாட்டு சட்டங்களின் படி அந்நாட்டு பெண்களின் திருமண வயது 15 ஆகும்.

No comments:

Powered by Blogger.