Header Ads

பாலக்காடு அருகே ஆற்றில் அடித்துச்சென்ற அக்காளை காப்பாற்ற குதித்த தம்பியும் பலி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோங்காட்டை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி சந்தியா. தினேஷ் கேரள அரசு போக்குவரத்தில் கண்டக்டராக உள்ளார்.
இவர்களது மகள் அம்ருதா (வயது9) மற்றும் ஆனந்த் (8). அங்குள்ள அரசு பள்ளியில் அம்ருதா 5–ம் வகுப்பும், ஆனந்த் 3–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று மாலை தாய் சந்தியா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பாரதபுழை ஆற்றுக்கு குளிக்கச்சென்றார். 3 பேரும் குளித்த இடம் காயத்ரி என்ற மற்றொரு ஆறு சேரும் இடமாகும். இதனால் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
இந்தநிலையில் மகள் அமுதா கால் தவறி தண்ணீரில் விழுந்தாள். வேகமாக வந்த தண்ணீர் அவளை அடித்துச்சென்றது. காப்பற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினாள். அக்காளை வெள்ளம் அடித்துச்செல்வதை பார்த்த தம்பி ஆனந்த் ஆற்றில் குதித்து காப்பாற்ற முயன்றான். அவனையும் தண்ணீர் அடித்துச்சென்றது.
இதைபார்த்த தாய் அதிர்ச்சியடைந்தார். சத்தம் போட்டு கதறினார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். சுமார் 30 நிமிடம் அவர்களை ஆற்றில் இறங்கி தேடினர். அந்த பகுதியில் அவர்கள் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து பாலப்புரம் ரெயில்வே கேட் அருகே 2 பேரும் பாறை இடுக்கில் சிக்கியிருப்பது தெரியவந்தது. அங்கு ஓடிச்சென்ற பொதுமக்கள் அவர்களை மீட்டனர். உடனடியாக அவர்களை கன்னியாம்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கண்முன்னே 2 குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் கதறித்துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

No comments:

Powered by Blogger.