Header Ads

எல் சால்வடாரில் எரிமலை வெடித்தது: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் கொந்தளிப்பாக உள்ள ஒரு எரிமலை வெடித்து, கடும் வெப்பத்துடன் சாம்பலை கக்கியதால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 2330 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. வானத்தையே மறைக்கும் அளவுக்கு 5000 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு புகை மூட்டம் இருந்ததால் அப்பகுதியில் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. 

எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட துகள்கள் 10 கி.மீ. சுற்றளவுக்கு பரவியுள்ளன.  இதன் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. அண்டை நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பாவுக்கும் இந்த எரிமலையின் சாம்பல் காற்றின்மூலம் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள எல் சால்வடார், நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.