Header Ads

டர்பன் டெஸ்ட்: இந்திய அணியின் தோல்வியைத் தவிர்க்க ரகானே போராட்டம்

இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி, ஸ்டெயினின் அபாயகரமான பந்துவீச்சில் விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. இதனால் முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக முரளி விஜய் 97 ரன்கள் சேர்த்தார். புஜாரா 70 ரன்கள் அடித்தார். ஸ்டெயின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதன்பின்னர் முதல் இன்னிங்கை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 500 ரன்கள் குவித்தது. பீட்டர்சன் (62), காலிஸ் 115), டிவில்லியர்ஸ் (74), ராபின் பீட்டர்சன் (61) ஆகியோர் சிறப்பாக விளையாடி பலம் சேர்த்தனர்.

இதையடுத்து 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர்கள் தவான் 19 ரன்களிலும், விஜய் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா (32), கோலி (11) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. புஜாரா, கோலி இருவரும் மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இவர்களின் விக்கெட்டை ஸ்டெயின் கைப்பற்றினார். ஒரு மணி நேரம் வரை நீடித்த ரோகித் சர்மா 25 ரன்களில் அவுட் ஆனார்.

நெருக்கடியான நேரத்தில் விக்கெட்டைக் காப்பாற்றும் முயற்சியில் நிதானமாக ஆடிய டோனி 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ரவீந்திர ஜடேஜா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. நெருக்கடியான சமயத்திலும் நிதானமாக ஆடிய அஜிங்கியா ரகானே அரை சதம் கடந்து தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடி வருகிறார்.

No comments:

Powered by Blogger.