Header Ads

வடக்கு மாகாண தேர்தல்: ஏமாந்த தமிழினம், வெற்றி பெற்ற குள்ளநரித்தனம்

இலங்கையில் நடந்து முடிந்த வடக்கு மாகாண தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இது ஏதோ தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியைபோல மீடியாக்கள் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் சில தலைவர்களும் "ஒழிந்தான் ராஜபக்சே" என்ற ரீதியில் வீர வசங்களை பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில், தமிழர்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த போது, சிறு துரும்மை கூட அசைக்காமல் நாடகமாடிய தலைவர்களும் அடக்கம். 

இப்போது விவகாரத்துக்கு வருவோம், வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சரி இதனால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது. வடக்கில் சிங்கள குடியேற்றத்தை தடுத்துவிட முடியுமா? இல்லை ராணுவம் தமிழர் பகுதியில் இருந்து நிரந்தரமாக வெளியேறி விடப்போகிறதா. எப்பவும் போல் தமிழர்கள் அடிமையாகவே இருக்கவேண்டியதுதான். என்ன ஒன்று பதவியைக்கொடுத்து அடிமையாக வைத்திருக்க போகிறார்கள். வடக்கு மாகாண முதல்வர் பதவி என்பது வெறும் பொம்மலாட்ட மொம்மை பதவி என்பது இன்னும் சில மாதங்களில் வெட்ட வெளிச்சமாக போகிறது, அல்லது தமிழர்கள் அடிமைபட்டு கிடப்பது கூட வெளியே தெரியாமல் போகப்போகிறது. 

இதில் ராஜ பக்சே எப்படி வெற்றி பெற்றார் என்றால், தமிழர் பகுதியில் முழுவதுமாக அமைதி நிலவுகிறது. மக்கள் சுதந்திரமாக உள்ளனர். 78% சதவீடம் வாக்களித்துள்ளனர், தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. போன்ற செய்திகளை உலகுக்கு அறிவித்துள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளன. இது நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு பெரும் சரிவு. இதற்கு மேல் வெளிநாடுகளில் தமிழர்கள் போராடம் புரட்சி என்று நடத்தினாலோ, தமிழகத்தில் மாணவர்கள் புரட்சி வெடித்தாலோ, "நல்லாதானே இருக்குறாங்க நீங்க ஏன் தேவையில்லாம சும்மா கூவுறீங்க?" என்ற கேள்வி நிச்ச‌யம் எழும்.

70 சதவீதம் ஓட்டுப்பதிவு, 80 சதவீதம் ஓட்டுப்பதிவு என்று அலப்பறை கொடுக்கும் மீடியாக்கள், எத்தனை வாக்குகள் பதிவானது என்று வாக்குகளின் எண்ணிக்கையை, ஒரு நிமிடம் யோசித்துப்பார்தால் அங்கு தமிழர்கள் எவ்வளவு குறைவான அளவு வசித்து வருகிறார்கள் என்று தெரியும்

No comments:

Powered by Blogger.