Header Ads

ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நிகழ்கிறது தெரியுமா!!!

நாம் தினமும் பயன்படுத்தும் இணையத்தில் நொடிப்பொழுதில் பல தகவல்கள் பரிமாறிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அதைப் பற்றி நாம் துல்லியமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் இணைய உலகில் நடக்கிறது என்பதை இணையதளம் ஒன்று விளக்கமாக கூறியிருக்கிறது.

அதன்படி. 1 நிமிடத்தில் 2 மில்லியன் தேடல்கள் கூகுளில் நிகழ்கிறது. 72 மணித்தியால வீடியோக்கள் யுடியூப்பில் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

70 டொமைன்கள் பதியப்படுவதுடன், 571 இணையதளங்களும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. சமூகவலைதளமான பேஸ்புக்கில் 1.8 மில்லியன் லைக்(likes)களும், டிவிட்டரில் 278,000 டிவிட்களும் பதிவாகின்றன.

அதேபோல 204 மில்லியன் மின்னஞ்சல்கள் ஒரு நிமிடத்தில் அனுப்பப்படுகின்றன. இன்னும் பல இணையசேவைகள் ஒரு நிமிடத்தில் வியக்கத்தக்க வகையில் நிகழ்கின்றன.

இந்த வளர்ச்சி கடந்த பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக கடந்த வருடத்தை விட இந்த வருடம் 36 மில்லியன் மின்னஞ்சல்கள் கூடுதலாக அனுப்பப்படுகின்றன.

இது கடந்த வருடத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு

No comments:

Powered by Blogger.