Header Ads

10 ஆயிரம் பேருக்கு அன்னதானத்துடன் தலைவா ரிலீஸ்

தலைப்பு , சென்சார் சர்ட்டிபிக்கேட் பிரச்சனையென ப‌ல தடைகளை தாண்டி, வரும் 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று  விஜய்யின் தலைவா திரைப்படம் ரிலீஸாகிறது.  இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் முதன் முறையாக அமலாபால் ஜோடி.


பாட்டுகள் அனைத்தும் ஹிட்டு. நாயகன் படத்துக்கு பிறகு மும்பையில் வாழும் தமிழ் தாதாவின் கதை. ரஜினிக்கு பாட்ஷா மாதிரி விஜய்க்கு தலைவா என்கிற பில்டப், இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வருகிறது.



உலகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகிறது. தமிழ்நாட்டில் 1000, கேரளாவில் 150, மும்பையில் 100, தெலுங்கில் 400, கர்நாடகாவில் 100, வெளிநாடுகளில் 250.


தமிழ் நாட்டில் படம் ரிலீசாகும் தினத்தில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் தங்கி உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும், சென்னை கோவில்களில் உள்ள கோ மடத்தில் உள்ள 1000 பசுமாடுகளுக்கு உணவளிக்கவும் தயாரிப்பளார் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஏற்பாடு செய்து வருகிறார்.

No comments:

Powered by Blogger.